T20 WC | இங்கிலாந்து கையில் ஆஸ்திரேலியாவின் ‘விதி’
சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் நியூஸிலாந்து அணி 7 புள்ளிகளை குவித்து வலுவான ரன் ரேட்டுடன் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் அந்த அணியின் ரன் ரேட் (-0.173) குறைவாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது இன்று நடைபெறும் இங்கிலாந்து – இலங்கை…









