அசல் எது… நகல் எது? பிளாஸ்டிக் முட்டையால் பேக்கரியில் நிகழ்ந்த குழப்பம் – சுவாரஸ்ய பின்னணி!
மக்களைக் கவர , பேக்கரி மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உணவு சாம்பிளை காட்சிக்காக வைப்பதுண்டு. ஆனால் அந்த சாம்பிளையே சாப்பிடக் கொடுத்தால் எப்படியிருக்கும்..?சாப்பிட வந்தவர்களுக்கு பிளாஸ்டிக் உணவு சாம்பிளை கொடுத்த விநோதமான சம்பவம் ஒன்று, ஜப்பானில் அரங்கேறி உள்ளது. மேற்கு ஜப்பான், ஒசாகா பகுதியில் ஆண்ட்ரூஸ் எக் டார்ட் (Andrew’s Egg Tart) என்ற பேஸ்ட்ரி கடை உள்ளது. இந்தக் கடையில், மக்களைக் கவர, முட்டையின் உணவு சாம்பிள் வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடைக்கு வந்த இரண்டு வாடிக்கையாளர்களுக்கு,…


