Ananda Vikatan – 03 February 2021 – பழைய சோறு… இப்போ புது மருந்து! | soaked rice is the best for health
2017-ம் ஆண்டில் அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பலன்களைப் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு உலகம் பழையதைத் தேடத் தொடங்கியது. அந்த ஆண்டு அமெரிக்கர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு செய்முறையில், பழைய சோறும் முக்கிய இடம் பெற்றது. அமெரிக்காவில் இருக்கும் பல ஓட்டல்களின் மெனு கார்டில் பழைய சோறு ஓர் உணவாக இடம்பெற்றது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், நோய் தீர்க்கும் ஆற்றலும் பழையதுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. IBD (Irritable bowel disease)…







