சேலம் அருகே பரபரப்பு பேட்டி; ரூ41 ஆயிரம் கோடி ரகசியம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஓமலூர்: ரூ41 ஆயிரம் கோடி ரகசியம் பற்றி சேலம் அருகே ஓமலூரில் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேட்டியளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். இந்த வழக்கில் உள்ளவர்கள்…







