உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: ஓபிஎஸ் அணியினர் சோகம்
சென்னை: உயர் நீதிமன்ற அமர்வு இன்று அளித்த தீர்ப்பையொட்டி எடப்பாடி ஆதரவாளர்கள் சென்னையில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவாளர்களை திரட்டி, எடப்பாடி பழனிசாமி கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து…









