Monthly Archives: September, 2022

இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரையில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கைது…

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட மாரடைப்பு… பிரபல காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்! |Comedian Raju Srivastava passed away

ஹிந்தி திரைத்துறையில் பிரபல காமெடியனாக வலம் வந்த நராஜு ஸ்ரீவஸ்தவா, தன்னுடைய 58 வயதில் செப்டம்பர் 21, புதன்கிழமையன்று இறந்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதியன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ் மருத்துவமனை) அனுமதித்துள்ளனர். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அன்றிலிருந்து அவரது நினைவு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். “அரை மணிநேரத்திற்கு முன்பு என்னுடைய…

`ஜெர்ஸியைத் தவிர எதுவும் மாறல’ – கேட்ச் ட்ராப்கள்; டெத் ஓவர் சொதப்பல்கள்; ஆஸியிடம் வீழ்ந்த இந்தியா! | India faced a shocking defeat against Australia in the first T20 match

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ரொம்பவே எளிதாக 4 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றிருக்கிறது.ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய ஏமாற்றமில்லை. ரோஹித்தும் கோலியும் சீக்கிரமே வெளியேறியிருந்தாலும் மற்ற வீரர்கள் நின்று அதிரடி காட்டினர். ஆசியக்கோப்பையில் கே.எல்.ராகுல் அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே…

நீரழிவு நோயாளிகள் கவனத்திற்கு… தினமும் 4 கப் டீ குடிச்சா சுகர் கண்ட்ரோல் ஆகுமா..?

டீ குடிப்பவர்கள் மற்றும் டீ குடிக்காதவர்களுக்கு இடையிலான, டைப் 2 நீரழிவு நோய்க்கான சாத்தியக்கூறுகளை பொறுத்தவரை வயது, பாலினம், உடலியல் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆபத்தின் அளவை கணக்கிடலாம் என குறிப்பிட்டுள்ளனர். நன்றி

மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்!

மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சித்த மருந்தான அதிமதுரக் குச்சிகளில் ஹெராயினை பூசி, கன்டெய்னரில் அடைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு ஹெராயினை மடக்கிப்பிடித்தது. Source link

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து!

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிராமண பத்திரம் பெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கையெழுத்து பெறப்படுகிறது. Source link

Doctor Vikatan: முதியவர்களைத் தாக்கும் நுரையீரல் தொற்று… தடுக்க முடியுமா? | Doctor Vikatan – Lung infection in the elderly – can it be prevented

இந்தத் தொற்றுகளை அலட்சியம் செய்யாமல், சரியான சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அபாயம் இருக்கிறது. இது தவிர சில முதியவர்கள் ஏதேனும் உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சைபெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அந்நிலையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். தவிர மருத்துவமனை சூழலிலிருந்தும் இவர்களுக்கு நோய்த்தொற்று பரவலாம். இதை Hospital-acquired infections என்று சொல்வோம். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முதியவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை இது. ஆகஸ்ட் தொடங்கி, டிசம்பர் வரையிலான மாதங்களில் முதியவர்களுக்கு ஃப்ளு காய்ச்சல்…

டி20 தரவரிசையில் மந்தனா 2-வது இடம்

துபாய்: இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3 ஆட்டங்களில் விளையாடி 111 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் மந்தனா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மந்தனா 91 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டன்…

அதிமுக ஃபார்முலாவில் மாவட்டம் பிரிப்பு… கோவை அதிரடிக்கு தயாராகும் திமுக!

கொங்கு மண்டல அரசியல், திமுகவுக்கும் எப்போதுமே சவாலான ஓர் விஷயம். கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற முடியவில்லை. கடந்த சில தேர்தல்களாகவே கோவை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது.செந்தில் பாலாஜி இதையடுத்து கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை களமிறக்கினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அப்போது முதலே மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம் என்ற தகவல் வட்டமடிக்க தொடங்கின. கோவை…

திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 25ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னைகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

1 18 19 20 21 22 60