தென் மாவட்டங்களில் பலத்தை காட்ட திட்டம்; ஓபிஎஸ்- சசிகலா பகுதிகளில் எடப்பாடி சுற்றுப்பயணம் துவக்கம்: விருதுநகரில் கருப்புகொடி காட்ட முயன்ற 35 பேர் கைது
மதுரை: தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு செல்வாக்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில், அங்கும் தொண்டர்கள் தன் பக்கம்தான் என்று பலத்தை காட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை நேற்று துவக்கினார். விருதுநகரில் அவருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு என இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் மேற்கு மாவட்டத்தினரே அதிகளவில் உள்ள நிலையில், தென்மாவட்டத்தினரிடம்…

