அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி நேற்று பதில் மனு அளித்தார். அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் சாவியை ஒப்படைக்கக்கூடாது என பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக…






