Daily Archives: September 8, 2022

காங்கிரஸ் புத்துணர்வு பெறும் சோனியாகாந்தி வாழ்த்து செய்தி

நாகர்கோவில்: ராகுல் நடைபயணம் வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் சோனியாஅனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘நான் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன், அதனால் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை, ராகுல்காந்தியின் இந்த பயணத்திற்கு பிறகு காங்கிரஸ் மிகப்பெரிய புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நடைபயணத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் பார்க்கிறேன். நான் இந்த நிகழ்வில் உங்களுடன் பங்கேற்பது போன்றே உணர்கிறேன். ஒற்றுமையாக நாம் முன்னேறி செல்வோம்’ என்று கூறியுள்ளார். Source link

ஆசிய கோப்பை | ஆப்கனை வீழ்த்தி இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது பாகிஸ்தான் | pakistan won afghanistan in asia cup t20 by 1 wicket sent india back home 

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவை ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணியின் பட்டியலிலிருந்து வெளியேற்றி உள்ளது பாகிஸ்தான். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். அதன் காரணமாக 130…

ஆரோக்கியமான முருங்கைக்கீரை திணை அடை தோசை… இரவு டின்னருக்கு பிளான் பண்ணுங்க…

திணையில் அடை மாவு அரைத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து சூடாக சுட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா..? இதுவரை ருசித்ததில்லை எனில் உங்களுக்கான ரெசிபி இதோ… நன்றி

செப் – 08 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

வரலாற்றில் காணாத பொருளாதார நெருக்கடியால் பேரழிவை நோக்கி நாடு நகர்கிறது: நடைபயண பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

நாகர்கோவில்: இந்திய தேச ஒற்றுமை நடைபயணத்தின் தொடக்கமாக கன்னியாகுமரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில்  ராகுல்காந்தி பேசியதாவது: இன்று இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இது அவர்களுக்கான தனிப்பட்ட கொடி என்று நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், அவர்கள் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். மதத்தின் மூலம், மொழியின் மூலம் பிளவுப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களால் ஒரு நாளும் தேசத்தை பிளவுப்படுத்த முடியாது. இந்த நாடு ஒரே நாடாக, ஒற்றுமையாக இருக்கும்.…

Sri lanka taught india on how to bowl in Slow pitch/ஸ்லோ பிட்சில் எப்படி பந்து வீச வேண்டும்-கற்றுக் கொடுத்த இலங்கை- விவரம் புரியாமல் ஆடிய இந்தியா – News18 Tamil

அனைத்து பில்ட்-அப்-களும் முடிந்து விட்டன. இந்திய அணி ஆசியக் கோப்பை 2022 இறுதிக்குள் நுழைவது ஏறக்குறைய முடிந்து விட்டது. துபாயில் நேற்று ஆக மந்தமான ஸ்லோ பிட்சில் இலங்கை அணி நிலைமகளை அட்டகாசமாக பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் சென்று விட்டனர், மாறாக இந்திய அணியின் கோலி முதல் தொடங்கும் மிடில் ஆர்டர் விவரம் பற்றாமல் ஆடி தோல்வி தழுவினர்.ஆசியக் கோப்பைக்கு முன்பாக பில்ட்-அப் கொடுக்கப்பட்டு நிஜப்புலிகளாக ஊதிப்பெருக்கப்பட்ட இந்திய அணியினர் காகிதப் புலிகளானதுதான் மிச்சம். டாஸில்…

நீலகிரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்; கோயில்களில் சிறப்பு வழிபாடு!

மலையாள மொழி பேசும் மக்கள் நீலகிரியில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முக்கிய திருவிழாவான ஓணத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நீலகிரியில் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமரிசையாக ஓணம் கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு நீலகிரியில் ஓணம் திருவிழா களைகட்டியிருக்கிறது.ஓணம் கொண்டாட்டம்வீடுகளில் பூக்கோலமிட்டு அலங்கரித்தும், கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்தும் இறைவனை வணங்கி வருகின்றனர். பூக்கள், பழம் காய்கறி போன்றவற்றை வாங்கும் மக்களால் சந்தைகள் நிரம்பி வழிகின்றன. கல்வி…

போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனருக்கு இலக்கா? ராமதாஸ் கேள்வி

சென்னை: போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனருக்கு இலக்கு நிர்ணயிப்பதா என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக்…