பூப்பெய்திய இளம்பெண்களுக்கான 10 உணவுகள்! | 10 foods for blooming teenagers!
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் ‘பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.”பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத் தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் ‘சத்துள்ள…








