அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்
மதுரை: அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்ற நடந்ததே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான உதயகுமார், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு மதுரையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு தரப்பினருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வதுதான் மரபு. வீர மரணமடைந்த ராணுவ வீரருக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் வெளியே…








