Monthly Archives: August, 2022

அருணாச்சலில் ஒரே ஜேடியு எம்எல்ஏ பாஜ.வில் ஐக்கியம்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களில் வென்றது. 41 இடங்களில் வென்ற பாஜவுக்கு அடுத்து 2வது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜவுக்கு தாவினர். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்திற்கு எஞ்சியிருந்த ஒரே எம்எல்ஏ டெசி கசோவும் நேற்று பாஜவில் இணைந்தார்.…

லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் சிறுநீர் நிறம் மாறுமா? | excessive use of lipstick may change urine color

பெங்களூரில் ஒரு பெண் அதிகளவில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டதால் அவரது சிறுநீரின் நிறம் மாறிய சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தி ஒரு மருத்துவ இதழிலும் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சியிடம் பேசினோம்:”இது பொதுவான பிரச்னைதான். லிப்ஸ்டிக் வாயின் வழியாக சிறுநீரகத்திற்குச் சென்றால் சிறுநீரில் இதுபோன்ற நிற மாற்றங்கள் ஏற்படும். லிப்ஸ்டிக் மட்டுமல்ல உணவில் சேர்க்கப்படும் நிறமிகளாலும் (Food Color) இது போன்று சிறுநீரின் நிறம் மாறலாம்.…

திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது – விராட் கோலி ஆவேசம் | Could not have come this far without talent says Virat Kohli

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச அரங்கில் சதம் அடித்து ஏறக்குறைய 3 வருடங்களாகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்திய தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் புத்துணர்ச்சியுடன் வரும் 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (டி 20 வடிவம்) கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது: எனது ஆட்டம் எந்த…

டெல்லி: திருமணம் மீறிய உறவு; 48 வயது பெண்ணின், 17 வயது மகளை இடைஞ்சல் எனக் கொன்ற 18 வயது இளைஞர்!

டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஷ் (18). பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இவர் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 48 வயது பெண்ணுடன் ஹரிஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்திருக்கிறார். ஹரிஷ் இந்த பெண்ணின் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தந்தை உயிருடன் இருக்கும் போதே, அம்மா வேறு ஒருவருடன் பழகுவது இந்த சிறுமிக்கு மனவேதனையும், கோபத்தையும் ஏற்படுத்தி…

டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி தப்ப முடியாது: தஞ்சையில் டிடிவி.தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்ப முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.தஞ்சாவூரில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக ஒரு அணிலை போல் செயல்படுவோம். பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் தான் இவர்கள் சிந்தனை நிறைவேறும் என்றார். அதிமுக, அமமுக இணையும் போது ஒற்றை தலைமை இருக்க…

Doctor Vikatan: பித்தப்பை கற்களுக்கு பித்தப்பையை நீக்குவதுதான் தீர்வா? | doctor vikatan – Is gallbladder removal the cure for gallstones

சரியான நேரத்துக்குச் சாப்பிடாதவர்களுக்கும் பித்தப்பை கற்கள் உருவாகலாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடும்போது, பித்தப்பையில் உள்ள பித்தநீர், தானாகவே சுருங்கி, குடலுக்குள் தள்ளப்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது பித்தப்பையிலேயே அந்த நீர் தங்கி, சுண்டி, மண்ணாகி, பிறகு கல்லாக மாறிவிடும். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுக்கும்போதும், பித்தநீருடன் கொழுப்பு சேர்ந்து, அது அப்படியே படிந்து கல்லாக மாறுகிறது. இந்த இரண்டு விஷயங்களும்தான் பித்தப்பையில் கற்கள் உருவாக பிரதான காரணங்கள். இவை தவிர வேறு காரணங்களும் உண்டு.அசைவ உணவுPhoto by…

முதல் போட்டியே பாகிஸ்தானுடன், அவர் வேற பார்மில் இல்லை- ரோஹித் சர்மாவின் தலைவலி

நல்ல தீர்வு சொல்லும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் கொரோனா பாதிப்பினால் ஆசியக் கோப்பையில் பங்கேற்பாரா என்பதும் தெரியவில்லை நன்றி

உஷார்… விந்தணுக்களை பாதிக்கும் இந்த 5 உணவுகளை ஆண்கள் தொடவே கூடாதாம்…

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் அல்லது ஆரோக்கியமான விந்தணுக்களை சிதைக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது. அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நன்றி

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வுக்கு நிபந்தனையுடன் தடை விதித்த உயர் நீதிமன்றம்: என்ன காரணம்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மின்கட்டண கணக்கீடு – கோப்புப்படம்இன்று (25.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இன்று வெளியான செய்திகளில் சிலவற்ற இங்கே தொகுத்து வழங்குகிறோம்).தமிழ்நாட்டில் மி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை, நிபந்தனையுடன் கூடிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.…

அமலாக்கத்துறையிடம் இருந்து டிடிவி.தினகரன் தன்னை பாதுகாத்து கொள்ளட்டும்: கோவையில் எடப்பாடி பதிலடி

பீளமேடு: கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சிறு,  குறு, நடுத்தர தொழில்களுக்கான மின்சார கட்டண உயர்வு பற்றி பரிசீலிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். அதை உடனே செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அது குறித்து கருத்து கேட்பு கூட்டம்  ஏற்கக்கூடியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.…

1 11 12 13 14 15 63