Daily Archives: August 23, 2022

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள்  பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சேதமடைந்துள்ள பள்ளியை திறக்க அனுமதி அளிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. Source link

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி மேல்முறையீடு இன்று விசாரணை: நீதிபதிகள் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி,…

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவை கலைத்தது உச்ச நீதிமன்றம் | Supreme Court dissolved the governing body of the Football Federation of India

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக்குழுவை கலைக்க உச்ச நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் கூட்டமைப்பின் தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றம், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரஃபுல் படேலையும், அவர் தலைமையில் இயங்கிய குழுவையும் கலைத்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலை நடத்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தாவே தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இதன்படி…

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்…

உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக ’பம்ப்’ செய்யத் தொடங்குகிறது. இந்த வேகமான ’பம்பிங்’ உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நன்றி

நாமக்கல்: அடிகுழாயை அகற்றாமல் கான்கிரீட்… தொடரும் கான்ட்ராக்டர்களின் அலட்சியம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களாக சாலையில் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிப்பம்பை அகற்றாமல் அலட்சியமாக அப்படியே கான்கிரீட்டை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.அடிபைப்பை அகற்றாமல் சிமெண்ட் தளம்இங்கே கான்கிரீட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை அ.தி.மு.கவைச் சேர்ந்த…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1,500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டு முதல் தான் மாத ஊதியம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் கூட இதைவிட அதிக ஊதியம் வழங்கப்படும் நிலையில்,…

இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்த சிகந்தர் ரசா சதம்; ஷுப்மன் கில் பேட்டிங், கேட்சினால் இந்தியா 3-0 வெற்றி

ஹராரேயில் நடைபெற்ற 3-வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 289/8 என்று ஸ்கோர்  எடுக்க ஜிம்பாப்வே 276 ரன்களுக்கு கடைசி ஓவர் வரை வந்து போராடி தோல்வி கண்டது.ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ரசா 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து தன் சமீபத்திய 6 ஒருநாள் போட்டிகளில்…

அமித் ஷாவின் காலணிகளை தூக்கிய பாஜக தலைவர் – ‘குஜராத் அடிமைகள்’ என்று விமர்சித்த டிஆர்எஸ்

3 மணி நேரங்களுக்கு முன்னர்தெலங்கானா மாநிலம் செகந்தராபாதில் உள்ள கோவிலுக்கு சென்று வந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காலணிகளை மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார் எடுத்துக் கொடுத்த சம்பவம், சமூக ஊடகங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள், அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியினரையும் கடுமையாகச் சாடி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தெலங்கானாவில்…

ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன்: அர்ஜூன மூர்த்தி பேட்டி

சென்னை: ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன் என்று அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார். பாஜவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் அர்ஜூன மூர்த்தி. இவர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து அங்கு சென்றார். ரஜினிகாந்த் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கி அர்ஜூன மூர்த்தி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை தி.நகரில் உள்ள பாஜ…