சரும நோய்களை எதிர்க்கும் வெட்பாலை… நல்வாழ்வுக்கான நலமாலை|மூலிகை ரகசியம் – 17
பயணங்களின்போது, ஜன்னல் ஓரம் அமர்ந்து, இயற்கையை ரசித்து வருகிறோம். சாலையோரங்களில் பல மரங்கள், செடி, கொடி தாவரங்களைப் பார்க்கிறோம். இவற்றில், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெண்ணிறப் பட்டைகளுடன் வளர்ந்துள்ள வெட்பாலை மரங்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.சரும நோய்களை விரட்டி அடிக்கும் வெட்பாலையை ஒரு மூலிகை ஹெர்குலஸ் என்று கம்பீரமாக அழைக்கலாம்! பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்`பாலை’ என்ற…