Daily Archives: August 4, 2022

குறைதீர்க்கும் கூட்டம்: மின்வாரியம் அழைப்பு

சென்னை: எழும்பூர், பெரம்பூர் கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து, தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எழும்பூர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (5ம் தேதி) காலை 11 மணிக்கு செயற் பொறியாளர் அலுவலகம், எண்.47, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை-12 என்ற முகவரியிலும் பெரம்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (5.8.2022) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம், பெரம்பூர் 110 கி.வோ செம்பியம் துணை மின்நிலையம்…

ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை: முத்தரசன் கண்டனம்

சென்னை: ஊராட்சிமன்ற தலைவர் படுகொலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்தின் தாளவேந்திரம் ஊராட்சியின் தலைவர் மூர்த்தி நேற்று முன் தினம் இரவு, கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூகவிரோதிகளின் கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய, இதற்கு துணை போன அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் சந்து, பொந்துகளில் தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் காவல்துறையினர்…

புற்றுநோயைத் தடுக்க புதிய வழி | A new way to prevent cancer

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க, பிறந்ததிலிருந்தே வரிசைகட்டித் தடுப்பூசிகள் போடுவதைப்போல, பெரியவர்களுக்குப் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும், ஏற்கனவே புற்றுநோய் இருந்தால் குணப்படுத்தவும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.உலக அளவில் அறிவியலாளர்களின் அயராத உழைப்பாலும்,  மருத்துவத் தொழில் நுட்பங்களில் ஏற்பட்டு வரும் மகத்தான முன்னேற்றங்களாலும் இது சாத்தியமாகி வருகிறது. புற்றுநோய் இல்லாத உலகம் படைப்பதற்குப் பாதை போடும் ‘தடுப்பு மருந்து சிகிச்சை’ (Immunotherapy) எனும் இந்தப் புதிய தொழில்நுட்பம், நமக்குக்…

CWG 2022 | குரூப் சுற்றில் கனடாவை 8-0 கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி | indian men hockey team beats canada by eight nil in cwg 2022 group match

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஹாக்கி விளையாட்டின் குரூப் சுற்றில் கனடாவை 8-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தி உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இந்தியா, கனடாவை இன்று (ஆகஸ்ட் 3) எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் பந்தை வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றுவதில் குறியாக இருந்தனர். அதன் வெளிப்பாடாக ஆட்டத்தின் தொடக்கம் முதல் பந்தை தங்கள்…