அதிமுகவில் எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது: மரக்காணம் விழாவில் எடப்பாடி பேச்சு
மரக்காணம்: கட்சியில் உள்ள எட்டப்பர்களின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளது என மரக்காணம் விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி. நான் அதிமுக பொதுச்செயலாளர் ஆவேன் என நினைக்கவில்லை. இரு பெரும் தலைவர்களும் பல்வேறு இன்னல்களை கடந்து…









