Cricket: சமநிலையற்ற LBW விதிமுறைகள்; ரவிச்சந்திரன் அஷ்வின் எழுப்பும் கேள்விகள் சரியா?
வேறு எந்த விளையாட்டை விடவும் கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் பல்வேறு விதிகள் பல்வேறு விதமான விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவது எப்போதைக்குமான வழக்கம்தான். அதிலும் LBW முறையை பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் போது உள்ள LBW-ன் முறை, பேட்டர்களின் பிளைண்ட் ஸ்பாட் ஆகியவற்றைக் குறித்து பேசியுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின்.”சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் பந்துவீச்சில் சுமார் பத்து முறைக்கு மேல்…









