அக்னிபாத் திட்டம்… ராணுவ வீரர்களை தயாரிப்பது நாட்டைப் பாதுகாக்கவா? பாஜகவுக்கு ஆள் எடுக்கவா? : பிரதமர் மோடி மீது திமுக முரசொலி அட்டாக்
சென்னை: மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையான அக்னிபாத் திட்டமானது பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் திட்டமா? என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக முரசொலி தலையங்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னாள்ராணுவ அதிகாரிகளின் கடுமையான எதிர்ப்புக்கும் ஆளாகி இருக்கிறதுஅந்தத் திட்டம். இத்தகைய சூழலில் வந்துள்ள விமர்சனங்களை மனதில் வைத்து அந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.…









