முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்
சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்தித்து மனு அளித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில், மாநில வளர்ச்சிக் குழுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர், அதிமுக…
