ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சாதாரணமா?
முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும் தி.மு.க. மட்டும் 133 இடங்களையும் கைப்பற்றின. மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.…