`ரசிகர்கள் என் கடவுள்’ 30 ஆண்டுகளாக தன் வீட்டில் ரசிகர்களைச் சந்திக்கும் அமிதாப் பச்சன் | -For 30 years, Amitabh Bachchan has been meeting fans at his home without wearing sandals on Sundays

Share

`ரசிகர்களைச் சந்திக்கையில் செருப்பு அணியாமல் செல்வது யார்?!’ என்று என்னை சர்ச்சையாகக் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், `நான் ரசிகர்களை சந்திக்கச் செல்கிறேன். நீங்கள் கோயிலுக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமை வரும் என் நலன் விரும்பிகள் என் கோயில். இதில் உங்களுக்கு என்ன சிக்கல் உள்ளது’ என்று கேட்டிருக்கிறார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெள்ளை குர்தா அணிந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாடுகிறார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சனின் பதிவைப் பார்த்து அவரின் ரசிகர்கள் அமிதாப் பச்சனை சோசியல் மீடியாவில் வெகுவாக புகழ்ந்துள்ளனர். `உங்களால் மட்டுமே இதுபோன்று செய்ய முடியும்’ என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், `உங்களை மிகவும் விரும்புவதாகவும், நீங்கள் நீண்ட நாள் வாழவேண்டும்!’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்று ஏராளமான ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அமிதாப் பச்சனை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அமிதாப்பச்சன் தனது வீட்டிற்கு வெளியில் எலுமிச்சை பழ ஜூஸ் கடை ஒன்றையும் திறந்து வைத்துள்ளார். அமிதாப்பச்சன் இப்போது பிராஜெக்ட் கே படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் நடித்த போது அமிதாப்பச்சன் காயம் அடைந்தார். காயம் முடிந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com