‘மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகும் தவெக!’ – நிர்வாகிகள் கூட்டத்தில் ஆனந்த் என்ன பேசினார்? |TVK Plans to Appoint More District Secretaries: What Anand Revealed at the Administrators’ Meeting

Share

உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கு சீட் கிடைக்காமல் போய் வேறொருவர் எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம். மாற்றுக்கட்சியிலிருந்து சிலர் உள்ளே வரலாம். ஆனாலும் உங்களுக்கு தளபதியின் மனதில் தனி இடம் உண்டு.

உங்களை சந்திக்க நிறைய பேர் வருவார்கள். அதை செய்து கொடுங்கள், இதை செய்து கொடுங்கள் என பணத்தை திணிப்பார்கள். அப்படி எங்கேயும் கை நீட்டி விடாதீர்கள். ஒரு மாத காலமாக நாம் ஊழலற்ற க்ளீன் கவர்மெண்டை நடத்தி வருகிறோம். நீங்கள் பணத்தை வாங்கி வந்தாலும் எந்த அமைச்சரும் உங்களிடம் கமிஷன் வாங்கமாட்டார்கள். நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு பாத்திரமாக நடந்துகொள்ளுங்கள்.

புஸ்ஸி ஆனந்த்

புஸ்ஸி ஆனந்த்

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தலைமைச் செயலகம் வரலாம். அமைச்சர்களை சந்திக்கலாம். ஆனால், உங்களுடன் சிபாரிசுக்காக யாரையும் அழைத்து வராதீர்கள்’ எனக் கறாராக கூறினார்.

அடுத்ததாக பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என மூன்று தரப்பும் எந்த முரணும் இல்லாமல் இணைந்து செயல்பட வேண்டும். லோக்கலில் நம்முடைய பெயர் கெட்டுவிடக்கூடாது. ஒயின் ஷாப் பார் லைசன்ஸ் எடுக்கிறேன், போலீஸ் ஸ்டேசனில் போய் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற எந்த வேலையையும் செய்துவிடக்கூடாது. உங்களுக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும் தலைமைக்கு தெரியப்படுத்துங்கள். நாங்களே சுமுகமாக முடித்துத் தருகிறோம். ஆயுசு உள்ள வரை தளபதிதான் முதல்வர். நாமெல்லாம் இணைந்து நல்ல ஆட்சியை கொடுப்போம் என்றார்’ என்கின்றனர் மா.செக்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com