1. பாதாம் பருப்பு

உலகெங்கிலும் உள்ள அதிகப்படியான மக்கள் சாப்பிடுகின்ற நட்ஸ் வகைகளில் ஒன்றாக பாதாம் பருப்பு உள்ளது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், பாலிபினால்ஸ், ஆரோக்கியமான கொழுப்புகள், விட்டமின்கள், புரதங்கள் ஆகியவை நிறைவாக உள்ளன. அது மட்டுமல்லாமல் ஜிங்க், மெக்னீசியம், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.
2. பலன்கள் என்னென்ன?

நம் மூளைத் திறனுக்கு மெருகூட்டி, நம் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதில் பாதாம் பருப்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதே சமயம், பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அப்படி சாப்பிடுவதால் நமக்கு கூடுதல் பலன்கள் கிடைக்குமா? என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
3. ஊட்டச்சத்து மேம்பாடு

பாதாம் பருப்புகளை ஊற வைப்பதால், பாதாம் பருப்பு தோளின் மீது உள்ள ஃபைடிக் அமிலம் உடைக்கப்படுகிறது. நம் உடலானது இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதை தடுக்கும் அரணாக ஃபைடிக் அமிலம் உள்ளது. ஆக, அந்த அமிலத்தை உடைப்பதால் நம் உடலுக்கு மிக முக்கியமான தாதுக்கள் சென்றடைகின்றன.
4. செரிமானம் மேம்படும்

பாதாம் பருப்பை ஊற வைப்பதால் அதன் தன்மை மாறுபடுகிறது. இதனால் மென்று சாப்பிடுவதற்கும், செரிமானம் அடையவதற்கும் எளிமையாக இருக்கிறது. செரிமானக் கோளாறுகளை சந்திக்கும் நபர்கள், இவ்வாறு ஊற வைத்த பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
5. விட்டமின் இ அதிகரிப்பு

நம் சரும ஆரோக்கியம், இதய நலன் ஆகியவற்றுக்கு தேவைப்படுகின்ற விட்டமின் இ சத்து பாதாம் பருப்பில் உள்ளது. பாதாம் பருப்பை ஊற வைப்பதால் இந்த விட்டமின் இ சத்து மேம்பாடு அடையும். ஆக,, நம் இதய நலனை மேம்படுத்த அது உதவியாக அமையும்.
6. புரத பயன்பாடு

ஊற வைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் அதில் உள்ள புரதச்சத்தை நம் உடல் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும். தாவர வகை உணவுகளில் இருந்து அதிக புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
7. என்ஜைம் நடவடிக்கைகள்

பாதாம் பருப்பை ஊற வைக்காமல் சாப்பிடும்போது நம் உடலில் நொதி ஏற்படும் நடவடிக்கைகளுக்கு அது தடையாக அமைகிறது. அந்த வகையில் நமக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். ஊற வைத்து சாப்பிடுவதன் மூலமாக இந்த தடைகளை தகர்த்து, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை பெற்றுக் கொள்ளலாம்.
8. நீர்ச்சத்து மேம்பாடு

வெறுமனே பாதாம் பருப்பை சாப்பிடும்போது, நீர்ச்சத்து இன்றி அதிக சுவை இருக்காது. அதுவே ஊறவைத்து எடுத்துக் கொண்டால் அதில் உள்ள நீர்ச்சத்து அதிகரிப்பதன் காரணமாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் மற்றும் அதன் தோற்றம் நல்ல ஈர்ப்பு கொண்டதாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :