ஒரு கொசு கடிச்சா என்னவாகும். கடிச்ச இடத்துல சிவப்பாகும். வலிக்கும். இன்னும் அதிகமாகப் போனால், டெங்கு, சிக்கன் குன்யா போன்ற நோய்கள் உண்டாகும். ஆனால் ஒருவருக்கு கொசு கடித்ததாலேயே 30 அறுவை சிகிச்சைகள், கோமா வரைக்கும் போய்விட்டார் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஜெர்மனி ரோடர்மார்க் பகுதியில் வசித்து வரும் 27 வயதான செபாஸ்டியன் ரோட்ஸ்கே (Sebastian Rotschke) என்பவரை, 2021-ம் ஆண்டு கோடைக்காலத்தின் போது `ஏஷியன் டைகர்’ என்ற கொசு கடித்துள்ளது.
கொசு கடித்த பின், ஆரம்பத்தில் காய்ச்சல் அறிகுறிகள் இவருக்கு ஏற்பட்டுள்ளன. அதன்பின் படிப்படியாக உடல்நிலை மோசமடைந்து, 30 அறுவை சிகிச்சைகள் மற்றும் நான்கு வாரங்கள் கோமாவில் இருக்கும் அளவிற்கு உடல்நிலை நலிவடைந்துள்ளது. இதயம், கல்லீரல், நுரையீரல் என பல உடலுறுப்பு செயலிழப்புகளையும் இவர் எதிர்கொள்ள நேரிட்டது.