டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் – என்ன நடக்கிறது? நேரலை

Share

சிஜேபி, அபிஜித் திப்கே, டெல்லி ஜந்தர் மந்தர்,

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர்மந்தரில் திரண்டுள்ள இளைஞர்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார். ஜந்தர் மந்தரில் அவர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினார்.

அத்துடன் அபிஜித் தீப்கே, “கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகங்களில் ஒரு பக்கத்தை நடத்துவதால் என்ன பயன் என்று மக்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். கேமராவைத் திருப்பி, வீடுகளிலிருந்து எத்தனை கரப்பான் பூச்சிகள் வெளியே வந்துள்ளன என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்,” என்று கூறினார்.

அவர் பேசுகையில், “இன்னும் ஓரிரு நாட்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் எங்களுடன் இணைவார்கள். ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஒவ்வொரு மாணவரின் குரல்தான் இந்தக் கட்சி,” என்று கூறினார்.

மேலும், “கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக இந்துக்கள் – முஸ்லிம்கள் என்ற அரசியலில் மக்களைச் சிக்கவைத்தனர். அதனால் யாருக்கு பயன் கிடைத்தது? இந்து – முஸ்லிம் அரசியல் பேசி நாட்டில் யாருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்ததா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அபிஜீத் தீபகே மேலும் பேசுகையில், “கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனது தாயும் சகோதரியும் ‘நீ இந்தியா திரும்பினால், அவர்கள் உன்னைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்’ என்று அழுதுகொண்டிருந்தனர். இது எனது தாயின் தனிப்பட்ட பயம் மட்டுமல்ல. இந்த நாட்டில், அரசியலைப் பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் பேசும் எந்தவொரு மாணவர் அல்லது இளைஞரின் தாயும், ‘தன் மகன் சிறையில் அடைக்கப்பட்டுவிடுவானோ’ என்று அஞ்சுகிறார். நாம் எவ்வளவு காலம் இப்படி அச்சத்துடன் வாழ்வது? இவர்களுடைய பயம் காட்டும் அரசியலுக்கு இனி அஞ்சப்போவதில்லை என்பதை அவர்களுக்கு ஒருமுறை புரியவையுங்கள்” என்று அவர் பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com