குழந்தைகளுக்கு சுவையான டிபன் செய்யணுமா..? இதை ட்ரை பண்ணி பாருங்க..

Share

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில் இடியாப்பம், புட்டு, போன்றவற்றை செய்வோம். குழந்தைகளுக்கு இது போர் அடித்து விட்டால் சாப்பிடும் அளவு குறைந்துவிடும். அதற்காக வெரைட்டி வெரைட்டியாக செய்ய வேண்டி இருக்கும்.

அப்போது அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை எல்லாம் சேர்த்து புதுமையான உணவுகள் செய்து கொடுத்தால் ஆர்வமாக குழந்தைகள் சாப்பிடுவார்கள். ஆனால் என்ன செய்வது என்பது தான் நமக்கு பலநேரங்களில் தெரியாது. பனீர், சீஸ் இரண்டுமே குழந்தைகளுக்கு பிடித்தது.

விளம்பரம்

இந்த இரண்டையும் பராட்டா மாவில் கலந்து பாரம்பரிய வட இந்திய ரொட்டிக்கு சீஸி ட்விஸ்ட் கொடுத்து செய்யும் பஞ்சுபோன்ற சுவையான குல்ச்சா ரெசிபி பற்றி தான் இந்த தொகுப்பில் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். இதை வெங்காய சட்னி, கொண்டைக் கடலை கிரேவியுடன் சாப்பிட சிறப்பாக இருக்கும்.

சீஸி பனீர் குல்ச்சா தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை

  • 1 கப் மைதா

  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

  • 1/2 தேக்கரண்டி சோடா

  • 1 தேக்கரண்டி சர்க்கரை

  • 1 தேக்கரண்டி உப்பு

  • 1/2 கப் தயிர்

  • 1 தேக்கரண்டி சீரகம்

  • 1/2 கப் சூடான பால்

  • தண்ணீர் (தேவைக்கேற்ப)

  • 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் நறுக்கியது

  • 1 டீஸ்பூன் எண்ணெய்

ஸ்டாப்பிங் செய்ய :

  • 1 கப் துருவிய பனீர்

  • 1 கப் அரைத்த சீஸ்

  • 1/2 கப் வெங்காயம் (நறுக்கியது)

  • 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் (நறுக்கியது)

  • 1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது)

  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி

  • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்

  • 1/2 டீஸ்பூன் உலர் மாம்பழ தூள்

  • கருப்பு உப்பு சுவைக்க

சீஸி பனீர் குல்ச்சா செய்முறை:

நீங்கள் முதலில் ஒரு கலவை பாத்திரத்தில் ரவை மற்றும் தயிர் கலந்து மாவை பிசைய வேண்டும். பின்பு இந்த கலவையை சிறிது நேரம் ஊறவைக்கவும். ஊறியபின்னர் அதில் மைதா, எண்ணெய், சமையல் சோடா, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து மிருதுவான மாவாகப் பிசையவும். மாவை ஒரு மூடியால் மூடி, புளிப்பதற்கு இரண்டு மணி நேரம் விட்டு விடவும்.

News18

இப்போது ஒரு பாத்திரத்தில், ஸ்டஃபிங்கிற்கு குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலக்கவும். மசாலாவை சரிபார்த்து, உங்கள் சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும். இப்போது ஸ்டஃபிங்கை  எலுமிச்சை அளவு உருண்டை செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் முன்னர் ஊறவைத்த மாவை சின்னதாக கையில் தட்டி உள்ளே ஸ்டாப்பிங் வைத்து எல்லா பக்கங்களிலிருந்தும் மூடுங்கள்.

இதையும் பாருங்க : 
வீட்டில் செய்யக்கூடிய சுவையான 5 மோமோ வகைகளை சொல்கிறோம்..

சிறிது தண்ணீர் தடவி சீரகம், கொத்தமல்லி தூவி  பராத்தா போல் உருட்டவும். கடாயை சூடாக்கி, அதன் மேல் குல்ச்சாவை வைக்கவும். விரல்களைப் பயன்படுத்தி சிறிது அழுத்தவும். குல்ச்சாவின் மேல் பக்கத்தை சமைக்க தவாவை நேரடியாக நெருப்பில் காட்டி வேகவிடவும்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com