இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் சாயலில் ஹிட் கொடுத்த 10 இசையமைப்பாளர்கள்

Share

இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் சாயலில் ஹிட் கொடுத்த 10 இசையமைப்பாளர்கள்

பட மூலாதாரம், Ilayaraja/Facebook

”1970 களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் இந்தி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமானது. தமிழ்நாட்டிலும் இந்திப்படங்களே அதிகமாக ஓடின. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு இந்திப்படங்களின் பாடல்களை விட, தமிழ்ப்படங்களின் பாடல்களும் சிறப்பாக அமையவேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளர் நமக்குக் கிடைக்காமலா போய்விடுவார் என்று ஏதோ ஒரு தைரியத்தில் நான் தேடிக்கொண்டே இருந்தேன்.”

மேடைப்பாடகரும், மூத்த பத்திரிக்கையாளருமான வெ.சந்திரமோகனின் ‘காற்றில் கலந்த இசை’ நுாலின் அணிந்துரையில் இப்படி எழுதியிருந்தார் படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்.

இளையராஜாவை அறிமுகப்படுத்திய நிகழ்வுகளை நினைவு கூரும் அவர், ”அன்னக்கிளி வெளியாகி இரண்டு வருட இடைவெளிக்குள் இளையராஜா இசையமைத்த ‘பத்ரகாளி’, ‘பதினாறு வயதினிலே’, ‘ப்ரியா’ என்று தொட்டதெல்லாம் 100 நாள், 25 வாரம் என்று ஓட ஆரம்பித்தது. பல புதிய தயாரிப்பாளர்கள், புதிய இயக்குநர்கள் திரைத்துறைக்கு வந்தார்கள். தமிழ்த்திரையுலகமே செழிப்பாயிற்று. அதன்பிறகு எங்கு பார்த்தாலும் இளையராஜாவின் பாடல்கள், இளையராஜாவின் இசைதான்.” என்றும் அவர் எழுதியுள்ளார்.

அவர் சொன்னதைப் போலவே இளையராஜா உச்சத்தில் இருந்த 80களிலும், 90களிலும் தமிழ் மண்ணில் எட்டுத்திக்கிலும் அவரது இசையே எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களுக்கு, ‘இளையராஜாவின் இசையில்’ என்ற வார்த்தையே, ஆகப்பெரிய விளம்பரமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தது. பெரும்பாலான படங்கள், அவருடைய இசையமைப்பில் வெளிவந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com