ஃபோலரின் பலோகுன்: ரெட் கார்டு பெற்ற அமெரிக்க வீரரின் தடை டிரம்ப் அழுத்தத்தால் நீக்கமா?

Share

டிரம்ப், ஃபிஃபா, பலோகன், ரெட் கார்டு, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபோலரின் பலோகுன்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மிக முக்கியமான, மாறாத விதிகளில் ஒன்று மாறிவிட்டது. உலகக்கோப்பை போட்டியில் ஒரு வீரருக்கு ஒருமுறை ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டால், அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாது.

இது, எந்த காரணமும், எந்தவித மறுப்பும், எந்த மேல்முறையீடும் இல்லாத இறுதி முடிவாக இருந்தது.

ஆனால், தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஃபோலரின் பலோகுனுக்கு காட்டப்பட்ட ரெட் கார்டை ரத்துசெய்த முடிவு, பல பதிலளிக்கப்படாத கேள்விகளை எழுப்புகிறது.

போஸ்னியா-ஹெர்சகோவினாவுக்கு எதிரான ‘லாஸ்ட்-32’ சுற்றில் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்ட பலோகுன், இப்போது திங்கட்கிழமை பெல்ஜியத்திற்கு எதிராக நடக்கவிருக்கும் ‘லாஸ்ட்-16’ சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இந்தத் தொடரில் மூன்று கோல்கள் அடித்த பலோகுன் அமெரிக்க அணியின் அதிக கோல் அடித்த வீரராக உள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 189 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டுள்ளன, அதில் இரண்டு வீரர்கள் மட்டுமே இடைநீக்கத்தை அனுபவிக்காமல் தப்பியுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com