Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு! | Zomato: A Pune resident ordered food online worth Rs 28 lakh in a single year

Share

2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 3300 முறை உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறார். அதாவது சராசரியாகத் தினமும் 9 முறை ஆர்டர் செய்துள்ளார். மற்றொருவர் ஒரே நேரத்தில் ரூ.25,000க்கு பீட்ஸா ஆர்டர் செய்து அசத்தியிருக்கிறார். புனேயைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு முழுக்க ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறார். மற்றொருவர் ஒரே ஆண்டில் 1098 முறை கேக் மட்டுமே ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.

மேலும் ஒருவர் ஒரே ஆண்டில் ரூ.6.96 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். 2022ம் ஆண்டில் சொமேட்டோ ஒரு நிமிடத்திற்கு 186 பிரியாணியைப் பொதுமக்களுக்கு டெலிவரி செய்துள்ளது. ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்த உணவும் பிரியாணிதான். அடுத்த இடத்தில் மசாலா தோசை, சிக்கன் பிரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், தந்தூரி சிக்கன் வகைகளை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com