WTC இறுதிப்போட்டியில் 34 ஓவர்கள் வீசிய ஹேசல்வுட் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். போட்டியின் முக்கிய தருணங்களில் விக்கெட் எடுக்கத் தவறினார்.
“எங்களது வெற்றிகரமான “பிக் ஃபோர்’ பவுலிங் அட்டாக்கான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன் ஆகியோர் இச்சூழலை எளிதாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.
அனுபவமிக்க வீரர்கள் ஆஷஸ் தொடரில் விடைபெறுவதற்காக மட்டுமே அணியில் நீடித்திருந்தால், அது சரியான மனநிலையா என்ற கேள்வி எழுகிறது.
எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நமது அடுத்த டெஸ்ட் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் நம்பிக்கைக் கொள்வது அவசியம்” என்றும் கூறியிருக்கிறார் மிட்செல் ஜான்சன்.
ஆஸ்திரேலிய அணியினர் அடுத்ததாக ஜூன் 25ம் தேதி வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.