“இம்முறை லீக்-ல் நான்கு அணிகள் மட்டும் இருக்கின்றன. இந்த லீக் தொடங்குவது தாமதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொடக்கத்துக்காக ஹாக்கி இந்தியா லீக்-ஐ பாராட்ட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாக்கி இந்தியா லீக் போட்ட அடித்தளத்தால்தான், ஆண்கள் ஹாக்கி அணி டோக்கியோ மற்றும் பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களை வென்றன. பெண்களுக்கான லீக் அறிமுகத்திற்கு நன்றி. இதனால், 2032 மற்றும் 2036 ஒலிம்பிக்கில் ஹாக்கியில் திறமையான பல இளம் பெண்களை நாம் நிச்சயமாக காண்போம். ஒருகாலத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதல்லவா? பெண்கள் ஐபிஎல் அணியை போல பெண்கள் ஹாக்கி அணியைப்பற்றியும் எல்லோரும் பேசுவார்கள். அந்தக்காலம் வெகுதூரத்தில் இல்லை” என பெண்கள் ஹாக்கி இந்தியா லீக்கின் தொடக்கம் குறித்து ரம்பால் நம்பிக்கையும் நெகிழ்ச்சியுமாக கூறியுள்ளார்.
தவிர, இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கோல் கீப்பர் பி. ஆர். ஸ்ரீஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்த ராணி ராம்பால், “ஸ்ரீஜேஷின் 20 ஆண்டுகால சர்வதேச அனுபவம் ஜூனியர் அணிக்கு மிகுந்த பயனளிக்கும்”‘ என்று நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.