இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு முக்கியமான காரணம் பேட்டிங் யூனிட் என்றால், அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும்தான்.

மறுபக்கம், தோல்வியின் எதிரொலியாக எழுந்த கடும் விமர்சனங்களால், இந்திய அணியில் விளையாடுபவர்கள் சர்வதேசத் தொடர்கள் இல்லாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் களமிறங்கினர். இதில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் களமிறங்கிய ரோஹித் உட்பட ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம்கூட அடிக்கவில்லை.