Virat Kohli: `பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கோலியின் கடைசி தொடரா..' – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் கூறியதென்ன?

Share

சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் 2024-25 முடிவுக்கு வந்திருக்கிறது. சிட்னி டெஸ்டில் வென்றதன் மூலம் 3 – 1 என தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபியை மீண்டும் தனதாக்கியிருக்கிறது. அதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுவதையும் ஆஸ்திரேலியா உறுதி செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி

மறுபக்கம், இந்திய அணியோ தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, இந்தத் தொடரில் பும்ரா 32 விக்கெட்டுகள் வீழ்த்தி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி இந்திய அணிக்குப் பங்காற்றியபோதும், நியூசிலாந்துடனான வரலாற்றுத் தோல்விக்குப் பின்னர் பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அடித்தாக வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்ட சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா பெரும் ஏமாற்றமளித்தனர்.

Virat Kohli

முக்கியமாக, இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியின்போது அணிக்குத் திரும்பிய ரோஹித், 3 போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் அடித்து மோசமான ஃபார்மில் இருந்ததால் கடைசி போட்டியில் விலகியபோதும், தொடர் முழுவதும் விளையாடிய கோலி 9 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு சதம் உட்பட 190 ரன்கள் மட்டுமே அடித்தார். அதுவும், பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைக்க கட்டாயம் வென்றாக வேண்டிய சிட்னி போட்டியில் 17 மற்றும் 6 ரன்கள் அடித்து ஏமாற்றமளித்தார். இதனால், கோலி, ரோஹித் இருவருக்குமே இதுதான் கடைசி தொடர் என்று பேசத் தொடங்கிவிட்டனர்.

மறுபக்கம், இந்திய வீரர்களின் எதிர்காலம் பற்றி தான் கூற முடியாது என்றும், அது அவர்களின் கையில் இருக்கிறது என்றும் சிட்னி தோல்விக்குப் பிறகு பேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், “எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும். உள்ளூர் போட்டிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விரும்பும் வீரர்களை ஒருபோதும் பெற முடியாது.” என்று கூறினார்.

இந்த நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பின்னர் கோலி குறித்து ஊடகத்திடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “அவருடன் விளையாடியதை மிகவும் ரசித்தேன். கடந்த பத்தாண்டுகளாக ஸ்டார் பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர் என்பது உங்களுக்கும் தெரியும். அவரின் விக்கெட்டை எடுத்தால் அது நீண்ட தூரம் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்பதை நீங்களும் அறிவீர்கள். ஒருவேளை இது அவரின் கடைசி தொடராக அமைந்தால் நிச்சயம் அது சோகமானது.” என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தொடரில் கோலியின் ஃபெர்பாமன்ஸ் குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடவும்.

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com