இந்நிலையில்தான், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. நடப்பு டி20 தொடர் தொடங்கியது. முதல் போட்டியே கொல்கத்தாவில். ஈடன் கார்டன் வருணுக்கு பழக்கப்பட்ட மைதானம். கடந்த மூன்று ஐ.பி.எல் சீசன்களில் சராசரியாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அதில் பெரும்பாலானவை ஈடன்கார்டனில் எடுக்கப்பட்டவை. அந்த அனுபவம் வருணுக்கு கைக்கொடுத்தது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பட்லர், ப்ரூக், லிவிங்ஸ்டன் என வீழ்த்தியதெல்லாமே பெரிய தலைகள். வெகுமதியாக மேன் ஆப் தி மேட்ச் விருதும் கிடைத்தது. சேப்பாக்கத்தில் நடந்த 2 வது போட்டியில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்ததில் கொஞ்சம் ஏமாற்றம்தான். வருணுமே கொஞ்சம் அப்செட்டாகத்தான் ராஜ்கோட்டுக்கு வந்திருப்பார்.