திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், இதற்குப் பதிலாக மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் நடத்த வேண்டும் எனவும், இந்த நேரத்தில் தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது எனவும் அதனால் இந்த நேரத்தில் குடமுழுக்கினை நடத்திட வேண்டும் எனக் கோயில் விதாயகர் தரப்பில் கூறப்பட்டது.

இதனால் திருக்கோயில் நிர்வாகத்திற்கும் விதாயகர்த்தா தரப்பிற்கும் கருத்து வேறுபாடு நிலவியது. நேரத்தை முடிவு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.
”இந்தாண்டு நீதிமன்ற உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை நியமித்த வல்லுநர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே நடத்தலாம்.