யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங், “கடந்த ஆறு மாதங்களில் இலங்கையிடம் தோற்றோம். நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ். இப்போது ஆஸ்திரேலியாவில் 1 – 3 எனத் தோல்வியடைந்தோம். ராகுல் டிராவிட் இருந்தவரைக்கும் எல்லாம் சரியாக இருந்தது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. ஆனால், திடீரென என்ன ஆனது? ஒவ்வொரு வீரருக்குமே நற்பெயர் இருக்கிறது. அதுதான் விஷயமென்றால், கபில் தேவ், அனில் கும்ப்ளே அல்லது இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்களாக இருந்தவர்களை சேர்க்கவும். பிசிசிஐ மற்றும் அணி தேர்வாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து இந்திய அணி வெளிவர வேண்டும்.

அபிமன்யு ஈஸ்வரன் ஆஸ்திரேலியா தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், விளையாட வைக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரும் இந்தியாவுக்கு விளையாடியிருக்க முடியும். சர்ஃராஸ் கானுக்கும் அதே கதைதான். தற்போது, இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வரவிருக்கிறது. நன்றாக விளையாடும் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டும். வீரர்களின் பெயரை வைத்து மட்டும் தேர்வு செய்யக்கூடாது.” என்று கூறினார்.
ஹர்பஜன் சிங்கின் இந்தக் கூற்று குறித்து தங்களின் கருத்தை கமெண்ட்டில் பதிவிடவும்.