T20 WC: “ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச் சென்ற பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்”- சூர்யகுமார்| indian team captain suryakumar yadhav on virat and rohit

Share

டாஸ் வெல்வது சாதகம்தான், ஆனால் டாஸை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை.

நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் 200 ரன்களுக்கு மேல் குவித்து நியூசிலாந்தை அழுத்தத்திற்குள்ளாக்குவோம்.

நியூசிலாந்து ஒரு சத்தமில்லாமல் சாதிக்கும் அணி அவர்கள் எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

ஆனால் அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

குறிப்பாக ரச்சின் ரவீந்திரா மற்றும் சாண்ட்னர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தனித் திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச் சென்ற பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். இந்த இளம்படை பயமில்லாமல் விளையாடுகிறது.

அவர்கள் இல்லாத குறையைத் தெரியாமல், கோப்பையை வென்று அவர்களுக்குப் பெருமை சேர்ப்போம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com