T20 WC: ‘இந்தியாவை விட சிறந்த சுழல் கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்’

Share

டி20 உலகக்கோப்பை, இங்கிலாந்து - இந்தியா, அரையிறுதி, சுழற்பந்து வீச்சு

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு ‘விசித்திரமான உணர்வு’ இருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகிறார்.

கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா இந்தத் தொடருக்குள் நுழைந்தது.ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது மற்றும் குரூப் போட்டிகளில் தடுமாறியது.

இங்கிலாந்து இன்னும் ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஆனால் தொடர்ச்சியான நெருக்கமான முடிவுகளைக் கடந்து ஐந்து தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

“அவர்கள் வெற்றிக்கான ஒரு வழியைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது,” என்று வாகன் ‘டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல்’ பாட்காஸ்ட்டில் பேசுகையில் கூறினார்.

“நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி, அது அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு போட்டியாக இருந்தபோதிலும், அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது ஒரு சிறந்த முயற்சியாகும்.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com