T Rajendar: ”நான் பெரிய நிறுவனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்’ என ரஜினி சொன்னார்! – டி.ராஜேந்தர் |T Rajendar Press Meet | Rajinikanth

Share

ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., “ரஜினி மாதிரி ஒரு பண்பான மனிதரைப் பார்க்கவே முடியாது. ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்தே நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள்.

என்னுடைய ‘ரயில் பயணங்களில்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் என்னைப் பாராட்டினார். அதைப் போல, ரஜினியும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார்.

பிறகு, இந்தக் காம்பினேஷனில், என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என ரஜினி சொன்னார்.

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

அதைத் தொடர்ந்து, ‘என்னுடைய தேதிகள் இப்போது இல்லை. நான் உங்களுக்கு கெஸ்ட் ரோல் செய்து தருகிறேன்’ என்றார்.

நானும் இந்தக் கதையைத் தயார் செய்துவிட்டு அவரை டப்பிங் ஸ்டுடியோவில் சந்தித்தேன். கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. கதையைக் கேட்டு முடித்ததும் என்னைக் கட்டிப்பிடித்தார்.

‘இந்தப் படத்தை நிச்சயமாகச் செய்யலாம்’ என்றார். அதன் பிறகு அதில் வேறொரு விஷயம்தான் தடையாக வந்தது. ‘பெரிய தயாரிப்பு நிறுவனத்தை வைத்துப் படத்தைத் தயாரிக்கலாம்’ என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com