இந்திய AI வேண்டுகோள்
திரு. ஜிபு எலியாஸ் (AI நெறிமுறையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்): “தற்போது AI மொழி மற்றும் கலாச்சார குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஒரு இந்திய AI-ஐ உருவாக்க வேண்டும்” என்றார்.
விளையாட்டுகளில் AI
திரு. பிரகாஷ் படுகோன் (முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர்): “விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி, வீடியோ பகுப்பாய்வு, ஊட்டச்சத்து திட்டமிடல் போன்ற அம்சங்களில் AI பெரிதும் உதவக்கூடும். ஆனால், அதைப் பயன்படுத்தி மனிதர்கள்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெல்ல வேண்டும்” என்றார்.
மாணவர் தொழில்முனைவோர் விருதுகள் – 2025
இளம் மனங்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக நடத்தப்பட்ட தொழில்முனைவோர் விருதுகள்-2025 இந்த மாநாட்டின் முக்கியச் சிறப்பம்சமாக அமைந்தது. அதில், வெற்றிபெற்ற…
வெற்றியாளர்கள்:
-
முதல் இடம்: சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, கோயம்புத்தூர் – ₹75,000 ரொக்கப் பரிசு
-
இரண்டாம் இடம்: ஸ்ரீ ரமணா அகாடமி, ராஜபாளையம்
-
மூன்றாம் இடம்: பிவிஎம் குளோபல்
விருது வழங்கல்
இந்த விருதுகளை டாக்டர் எஸ். ராஜசபாபதி (கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைத் தலைவர்), டாக்டர் மணிமேகலை மோகன் மற்றும் திருமதி ஸ்ரீஷா மோகன்தாஸ் ஆகியோர் வழங்கினர்.
டாக்டர் எஸ். ராஜசபாபதி தெரிவித்தார்: “மருத்துவர்களின் கைகளால் எட்ட முடியாத பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை ரோபோக்கள் மூலம் செய்ய முடியும்.” என்றார்.
இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள்
நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த கல்வியாளர்களுக்கு இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள் வழங்கப்பட்டன. SSVM நிறுவனங்களின் அறங்காவலர் திரு. மோகன்தாஸ் மற்றும் எஜூகேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இயக்குநர் திரு. நிதின் ஜெய் ஆகியோர் பல்வேறு விருதுகளை வழங்கினர்.