Spirit Airlines: தனியாகப் பயணித்த 6 வயது குழந்தை; வேறு விமான நிலையத்தில் தரையிறக்கம்… யார் தவறு? | A 6-year-old child on Spirit Airlines was mistakenly landed

Share

ஆர்லாண்டோவில் தரையிறங்கிய குழந்தை, தன் பாட்டியை அழைத்துள்ளது. அதன்பிறகு தன் பேரனைக் காண ஃபோர்ட் மியர்ஸில் இருந்து கிட்டத்தட்ட 160 மைல்கள் பயணித்து குழந்தையிடம் சென்று சேர்ந்துள்ளார்.

`என் வாழ்விலேயே மிகவும் திகிலூட்டும் அனுபவம்” என மரியா ரமோஸ் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.

அவர் பயணத்திற்கான செலவை விமான நிறுவனம் கொடுக்க முன்வந்தது. இருந்தாலும் தவறு நடந்ததற்கான காரணத்தை அளிக்குமாறு ரமோஸ் கேட்டுள்ளார்.

`குழந்தை எப்போதும் ஒரு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் இருந்தது. ஆனாலும் குழந்தை தவறுதலாக ஆர்லாண்டோவிற்கு பயணித்தது. 

அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் சேர்க்க உதவினோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கிறோம். இந்த அனுபவத்திற்காக குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கிறோம்’ என்று ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com