Sourav Ganguly புரொமோஷன்!
இன்று வெளியான புரோமோவில், ‘காக்கி: தி பெங்கால் சாப்டர்’ தொடரின் குழுவினர் அவரது கதாபாத்திரத்தை விளக்குவதாகக் காட்சிகள் இடம்பெற்றன.
காவலர்கள் லத்தியில் அடிப்பதுபோல தனது கிரிக்கெட் ஷாட்களை ஆடினார் கங்குலி. அனைத்து 8 விநாடிக்குள் அடிக்க இயக்குநர் கேட்டதனால், பிரோமோவின் பாதியிலேயே கங்குலி நடிக்கும் ஆசையைக் கைவிடுகிறார். பின், அவரைத் தொடரை புரோமோஷன் செய்ய ஒத்துக்கொள்ள வைக்கின்றனர்.
இந்த புரோமோ மூலம் கங்குலி தொடரில் இல்லை என்றாலும் அதனை புரொமோட் செய்ய இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கிறது. என்னவானாலும் கங்குலியை இப்படிப் பார்ப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Khakee: The Bengal Story
காக்கி: தி பெங்கால் சாப்டர் தொடரில் ஜீத் மத்னானி, ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி, சாஸ்வத சாட்டர்ஜி மற்றும் பரம்பிரதா சாட்டர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். கொல்கத்தாவில் 2000களில் நடப்பதாகக் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வருகின்ற மார்ச் 20ம் தேதி நெட்ஃளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.