ஸ்ருதி காணாமல் போன விஷயத்தை ரவி முத்துவிடம் சொல்கிறார். முத்துவும் மீனாவும் ஸ்ருதியின் ரெகார்டிங் ஸ்டூடியோ சென்றுப் பார்க்கின்றனர். அங்கு வேறு ஒரு முகவரியை சொல்ல அங்கும் போய் விசாரிக்கின்றனர். அப்போது ஸ்ருதி விவாகரத்துச் செய்யும் வழக்கறிஞரை சந்திக்க சென்றிருப்பது தெரிய வருகிறது. இருவரும் வழக்கறிஞர் இருக்கும் முகவரிக்கும் செல்கின்றனர். அங்கு ஸ்ருதி காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கிறார்.
ரவியை விவாகரத்து செய்யப் போவதாக சொல்கிறார். மீனாவும் முத்துவும் அதிர்ந்துப் போகின்றனர். இதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது.
எப்படியும் ஸ்ருதியை சமாதானப்படுத்தி, நடந்த உண்மையை விளக்கி மீனா புரிய வைத்துவிடுவார். ரவி-ஸ்ருதியின் திருமண நாள் கொண்டாட்டம் நடந்துவிடும்.
ஸ்ருதி ரவியிடம் சண்டைப் போடும் காட்சிகள் 2k தம்பதிகளை நினைவூட்டுகிறது. சின்ன சின்ன பிரச்னைகளுக்கு கூட விவாகரத்து முடிவு எடுப்பது, உறவை முறித்து கொள்ள நினைப்பது, பிரசவ வலிக்கு பயந்து வாடகை தாய் முறையை தேர்வு செய்வது என முதிர்ச்சியின்மையுடன் நடந்து கொள்கிறார்.