இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் ஒன்றரை வருடமாக இந்திய அணியில் புறக்கணிப்பட்டார்.
ஆனால், அதே காலகட்டத்தில் ஐ.பி.எல் உட்பட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகளையும் வென்று, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அணிக்குள் நுழைந்து சாம்பியனானார்.
இருப்பினும், நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் நடப்பு ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.

அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2023-ல் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு கால் தற்காலிகமாகச் செயலிழந்ததையும், அப்போது தான் கடந்துவந்த வலியையும் பற்றி ஸ்ரேயஸ் ஐயர் மனம் திறந்திருக்கிறார்.