இதுகுறித்து ஐ.சி.சி தனது இணையதளப் பக்கத்தில், “கணுக்கால் காயம் காரணமாக இந்தியாவின் ஓப்பனிங் வீராங்கனை பிரதிகா ராவல் நடப்பு ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.
அக்டோபர் 30-ம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக ஷபாலி வர்மாவை இந்தியா அறிவித்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.

கடைசியாக 2022 ஜூலையில் இலங்கைக்கெதிரான ஒருநாள் போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, மோசமான ஃபார்ம் காரணமாகக் கடந்த ஆண்டு அக்டோபரில் நியூசிலாந்துக்கெதிரான தொடருக்குப் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக ஷபாலி வர்மா தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் 29 போட்டிகளில் 644 ரன்கள் அடித்திருக்கிறார். அதேசமயம், சர்வதேச டி20 கரியரில் 90 போட்டிகளில் 2221 ரன்கள் அடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஓராண்டாக தேசிய அணியில் இடம்பெறாமல் இருந்த ஷபாலி வர்மா கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அணியில் இடம்பிடித்து 176 ரன்கள் அடித்திருந்தார்.
எனவே, பிரதிகா ராவலுக்குப் பதிலாக ஷபாலி வர்மா அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் அரையிறுதியில் களமிறக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான். அணி என்ன முடிவெடுக்கிறது என்பதை அக்டோபர் 30-ல் பார்க்கலாம்.