இன்றைய இளம் தலைமுறை பெண்களில் சிலர், ‘நான் லெஸ்பியன்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், லெஸ்பியன் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். ஏசெக்ஷுவல் நிலையிலும் அப்படி நடந்துவிடக்கூடாது. அதை உறுதிப்படுத்த முறையான மருத்துவ பரிசோதனைகள் இருக்கின்றன அவற்றைச் செய்து பார்த்து ஏசெக்ஷுவல் என்று முடிவானால், அதன்படி தாராளமாக வாழலாம்” என்றவர், அவை குறித்து விளக்க ஆரம்பித்தார்.
”முதலில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு டிப்ரெஷன் போன்ற மனம் தொடர்பான பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்து, Obsessive-compulsive disorder எனப்படும் ஓசிடி குறைபாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு அடுத்தவர் தொடுவதுகூட பிடிக்காது. இவர்களுக்கு ஓசிடி-க்குத்தான் சிகிச்சை தர வேண்டுமே தவிர, இவர்களை ஏசெக்ஷுவல் நபர்கள் என்று குறிப்பிடக்கூடாது.
ஏசெக்ஷுவல் நபர்கள் என்றாலே அவர்கள் சாமியார்கள் போல இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களும் எல்லோரையும்போல சாதாரணமாகத்தான் தோற்றமளிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பாலின ஈர்ப்பு இல்லையென்பது தெரிந்தபிறகும் அவர்களுடைய புறத்தோற்றத்தின் மீது விருப்பப்பட்டு அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.
ஏசெக்ஷுவல் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட கணவர்களுக்கு ஒரு வார்த்தை. ‘இவ்ளோ அழகா இருக்கா; அன்பா இருக்கா. ஆனா, கட்டிப்பிடிக்கக்கூட மறுக்குறாளே’ என்கிற தவிப்பில் அவர்களை வற்புறுத்தவோ, வன்முறையாக நடந்துகொள்ளவோ கூடாது. அது அவர்களுடைய பாலியல் நிலைமை. அதற்கு மரியாதை கொடுப்பதுதான் சரி” என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.