இறுதிப்போட்டி ஜோஹனஸ்பர்க் மைதானத்தில் நடந்திருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரஷீத் கான் தான் டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்திருந்தது. மும்பை அணியின் சார்பில் ரிக்கல்டன், எஸ்டரைசன், டிவால்ட் ப்ரெவிஸ் ஆகியோர் கணிசமான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். இவர்களின் ஆட்டத்தால்தான் மும்பை அணி நல்ல ஸ்கோரை எட்டியது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தட்டி செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்களால் 105 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணியின் கட்டுக்கோப்பான பௌலிங்கில் திணறிவிட்டனர். ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்த போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை அணி மிக எளிதாகவே போட்டியை வென்று சாம்பியன் ஆகிவிட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி SAT20, ILT20, MLC என தென்னாப்பிரிக்கா, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளின் லீகுகளிலும் அணியை வைத்திருக்கிறது. இந்த அத்தனை லீகுகளிலும் அவர்களின் அணி சாம்பியனும் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தை வேறெந்த அணியும் செய்ததில்லை.