Sarfaraz Khan; மும்பை கங்கா லெக் போட்டியில் களமிறங்கிய சர்பராஸ் கான், முன்னாள் வீரர்களான கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியரை முன்னுதாரணம் காட்டினார்.

Share

மும்பையில் நேற்று (ஆகஸ்ட் 10) தொடங்கிய மழைக்கால கிரிக்கெட் தொடரான கங்கா கிரிக்கெட் லீக்கில் கலந்துகொண்ட பின் பேசிய சர்பராஸ் கான், “சுனில் கவாஸ்கர் சார் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த அன்றே, கங்கா லீக் போட்டிக்கு எப்படி வந்தார் என்பது பற்றி என் தந்தை நான் சிறுவயதாக இருக்கும்போது கூறியிருக்கிறார்.

எனவே, நானும் என் தம்பி முஷீரும் இதில் விளையாடுவதில் பெருமைப்படுகிறோம். மும்பை வீரர்கள் அனைவரும் கங்கா லீக்கில் விளையாட வேண்டும்.

கங்கா லீக்கில் சர்பராஸ் கான்

கங்கா லீக்கில் சர்பராஸ் கான்

சில வீரர்கள், தாங்கள் தோல்வியடைந்தால் தங்களின் எதிர்காலம் மோசமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் இப்படி நினைத்திருந்தால் அவர்கள் ஜாம்பவான்களாக மாறியிருக்க மாட்டார்கள்.

பெரிய வீரர்கள் இதில் விளையாடினால், அது நகரத்தின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். நீங்கள் இங்கே வெற்றி பெற்றால், உலகில் எங்கும் ரன்கள் எடுக்க முடியும்” என்று கூறினார்.

இஸ்லாம் ஜிம்கானாவுக்கு எதிரான போட்டியில் பார்கோபோன் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக களமிறங்கிய சர்பராஸ் கான் 42 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com