sanju samson; suryakumar yadav; asia cup; ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேச்சு

Share

இவ்வாறிருக்க, ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இதற்கு முன் ஓப்பனிங்கில் ஆடிய ஜெய்ஸ்வால், கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய நால்வரில் ஜெய்ஸ்வால் மட்டும் இடம்பெறவில்லை.

இதனால், ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மாவின் இடம் உறுதியாகிவிட்டது. ஆனால், இன்னொரு ஓப்பனிங் வீரர் கில்லா, சஞ்சு சாம்சனா என்பதுதான் உறுதியாகவில்லை.

ரவி சாஸ்திரி, கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சாம்சனை இதற்கு முன் அவர் ஆடிய இடத்திலேயே களமிறக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்த நிலையில், ஆசிய கோப்பை இன்று தொடங்குவதற்கு முன்பு அனைத்து அணிகளின் கேப்டன்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அந்த சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர், பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இருப்பாரா என்று சூர்யகுமார் யாதவிடம் கேள்வியெழுப்பினார்.

அப்போது, “பிளேயிங் லெவனை உங்களுக்கு மெசேஜ் செய்கிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறிய சூர்யகுமார் யாதவ், “சஞ்சு சாம்சனை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள், நாளை சரியான முடிவை நாங்கள் எடுப்போம்” என்று கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com