அம்பத்தி ராயுடுவும் எங்களுக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அந்தப் பொறுப்பை இப்போது நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நம்பர் 3 இல் இறங்குகிறேன். இதன் மூலம் அதிரடியாக ஆடக்கூடிய திரிபாதிக்கும் ஓப்பனிங்கில் வாய்ப்பு கிடைக்கும்.

இது ஏலத்தின் போதே முடிவு செய்யப்பட்டதுதான். எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. என்னால் ரிஸ்க் எடுத்தும் ஆட முடியும். ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய முடியும். ஆனால், கடந்த சில போட்டிகளாக எப்படி பார்த்தாலும் முதல் 2 ஓவர்களுக்குள்ளாகவே வந்துவிடுகிறேனே. எங்களுக்கு ஓப்பனிங்கில் ஒரு மொமண்டம் கிடைத்துவிடும்பட்சத்தில், நாங்கள் சிறந்த அணியாக மாறிவிடுவோம். நூர் நன்றாக வீசியிருக்கிறார். கலீல் அஹமது நன்றாக வீசியிருக்கிறார். இதையெல்லாம் இங்கிருந்து பாசிட்டிவ்வாக எடுத்துச் செல்கிறோம்.’ என்றார்.